ஆன்லயனில் பாதுகாப்பாக இருங்கள்

இந்த சைட்டில் தப்பான மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஜஸ்ட் லேண்டேட் உதவுகிறது. இருந்தாலும் நாங்கள் எந்தவித வியாபார நடவடிக்கைகளில் ஈடு படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் ஆகையால் நீங்கள் ஈடுபடும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் உத்திரவாதம் கொடுக்க முடியாது. நாங்கள் விற்பவர் வாங்குபவர் சேவையில் அல்லது escrow சேவையில் ஈடு படவில்லை நாங்கள் உங்களுக்கு கேட்டு கொண்டோ அல்லது உத்திரவாதம் கொடுத்தோ மின்னஞ்சல் அனுப்ப மாட்டோம்.

ஒரு தப்பான விளம்பரத்தை பார்த்தால் அதன் மேல் உள்ள ‘ரிபோர்ட்’ பொத்தானை க்ளிக் செய்து எங்களுக்கு சொல்லுங்கள். இது சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும் அவைகளை கண்டு பிடிக்கவும் உதவும்.

நாங்கள் கேட்டு கொள்வது

ஆன்லயனில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை தெரிந்து கொள்ள பின் வருவதை படிக்க சிறிது நேரம் செலவிடுங்கள்:

  • ஆன்லைன் ப்ரோவைடருக்கு உங்கள் வங்கி கணக்குக்கு மற்றும் உங்களைப்பற்றிய சேதிகளை அறிந்து கொள்ள இடம் கொடுக்காதீர்கள் (PayPal மாதிரி ) . உங்களைப்பற்றி தனிப்பட்ட செய்திகளை கேட்டால் அது தப்பான முயற்சியாக இருக்க கூடும் அந்த ஒப்பந்தம் உண்மைக்கு புறம்பானதாக இருக்க கூடும் என்று நினைக்கிறீர்களா? அப்படி இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்! பண மாற்றுதலில் கொழுத்த கமிஷன், சில ஆயிரம் ஈரோக்களுக்கு ஒரு கார்,குறைந்த வட்டியில் கடன் ஆகியவை கூட தப்பான முயற்சியாக இருக்கலாம். நம்பக்கூடிய பெரிய ஒப்பந்தங்கள் மிக பெரிய ஊழல்களாகும் .
  • இலவசம்!எதாவது இலவசமாக கிடைத்தால் அது நமது புத்தியை மழுங்க அடித்துவிடும் . இது ஊழல்வாதிகளால் பயன் படுத்தி கொள்ளப்படுகிறது;குறிப்பாக பிராணிகள் விஷயத்தில் . ஒரு நல்ல வீட்டுக்கு செல்ல பிராணி வளர்க்க கொடுக்கப்படுகிறது. அதற்கான கப்பல் செலவை நீங்கள் ஏற்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்ல்து குறிப்பிடப்படாமலிருக்கலாம். அதற்கான இறக்குமதி செலவுக்கு பணம் கட்டிவிட்டால் செல்ல பிராணி என்பது கற்பனையாக இருக்கும் அது வராமலே கூட போய்விடலாம்.
  • இன்ஸ்டன்ட் மணி ற்றான்ச்பிர் செர்வீஸ் க்கு பணம் அனுப்ப சொன்னால் எச்சரிக்கையாய் இருங்கள் (வெஸ்டேர்ன் யூனியன் அல்லது மனிக்ராம் மாதிரியான ). ஒரு தப்பானவருடன் சம்பந்த பட்டிருக்கலாம். போலியான IDபெறுவது சில நாடுகளில் சுலபமாக இருக்கலாம், ஆகையால் குற்றவாளிகளுக்கு பணம் பெறுவது சுலபமாக இருக்கிறது, அதை மாற்ற முடியாது (உங்களால் பணத்தை திரும்ப பெற முடியாது).
  • பெயர் இல்லாதது ஒரு எச்சரிக்கை. இலவச மின்னஞ்சல் என்பது ஒரு பெரிய பிரச்னை ஏனென்றால் ஆயிர கணக்கான உண்மையானவர்கள் Gmail and Hotmailபோன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்பவர்களை உபயோகிக்கிறார்கள் ஆனால் இந்த முகவரிகள் குற்றவாளிகளுக்கு பாது காப்பு கொடுக்கின்றன, இதை கவனத்தில் கொள்ளவும். மொபைல் நம்பர் மற்றும் சாதரண நம்பர்களுடன் ஜாக்கிரதையாய் இருங்கள்; முதலாவதில் இவை சில சமயம் ப்ரீ பெயிட் கார்டாக இருக்கலாம் இரண்டாவதில் அழைபபுகள உங்களுக்கு தெரியாமலே வேறு எங்கிருந்தோ அனுப்பப்பட்டிருக்கலாம்.

பொதுவான ஊழல்கள்

  • ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால் ஊழல்வாதிகள் ஆன்லயனில் உங்கள் வங்கி கணக்குகளை பார்த்து அதிலிருந்து பெரும் தொகையை எடுக்க முடியும் என்பதுதான். ஆகையால் அவர்கள் தப்பானவர்களை சேர்த்து பணத்தை பெறுகிறார்கள் (வியாபாரம் செய்வதற்கு உல் நாட்டில் ஒருவர் தேவை என்று சொல்லி) பிறகு தங்களுக்கு அந்த பணத்தை மாற்றி கொள்கிறார்கள்.வங்கி உங்களிடம் பணத்தை திரும்ப கேட்பதால், உங்களால் அந்த பணத்தை திரும்ப கொண்டு வர முடியாததால் இடையில் மாட்டி கொண்டு எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்.
  • ஒரு செக் அல்லது மணியார்டர் வந்தால் ஜாக்கிரதையாய் இருங்கள் ஒரு வேலை அது கள்ள கையெழுத்து போட்ட அல்லது தப்பானதாக இருக்கலாம் வங்கிகள் உடனடியாக கிரெடிட் செய்வதை குற்றவாளிகள் சாதகமாக எடுத்து கொள்கிறார்கள். செக் உண்ம்மையானது இல்லை என்றால் வங்கிகள் பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்பது பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. இதற்கு இடையில் சரக்கு அனுப்பி இருந்தால் அதை இழந்து விடுவீர்கள்.
  • முன் பணம்: குடியிருப்புக்கான முன் பணம், ஒரு கார் வாங்க கட்டிய பணம் அல்லது கப்பல்/நிர்வாகம்/ மற்றவை எதுவாக இருந்தாலுன் மணி டிரான்ஸ்பர் செர்வீசில் அனுப்பி இருந்தால் திரும்ப கிடைக்காது. ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தால் அது உண்மையானது, வாடகைக்கு விட்டவர் உண்மையானவர் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பல வேறு நாடுகளிலுருந்து வேலை செய்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள்; ஒரு நாட்டில் இருந்து கொண்டு மற்றொரு நாட்டில் வாடகைக்கு விடுவதில் அர்த்தம் இருக்கிறதா? .
  • ஒரு சாதரண ஊழல் என்பது ஒத்து கொண்ட விலையை விட அதிக தொகைக்கு செக் அனுப்புவது.வாங்குபவர் உங்களிடம் கூடுதல் பணம் கட்டிவிட்டோம் திருப்பி அனுப்புங்கள் என்று சொல்வார் இது அசாதாரணமாக இருக்கிறது என்று நினைப்பீர்கள்,ஆனால் வங்கி உங்கள் கணக்கில் வரவு வைத்தால் நீங்கள் கூடுதல் பணத்தை அனுப்ப தான் வேண்டும். நிச்சயமாக பின்னொரு காலத்தில் செக் போலிஎன்று கண்டுபிடிக்கப்பட்டு உங்கள் கிரடிட்டை ரிவேர்ஸ் செய்தால் பணத்தை இழந்துதான் ஆக வேண்டும்.
  • யாராவது ஒருவர் நீங்கள் செய்யும் உதவிக்காக மில்லியன் டாலர் கமிஷனாக தருகிறேன் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள் இது ஒரு ஊழலாக இருக்க கூடும்.பணம் இருக்காது நீங்கள் ஏதாவது பணம் கட்டியிருந்தால் இழந்து விடுவீர்கள். இந்த ஊழல் பற்றி தெரிந்து இருந்தால் வேறு மாதிரி யோசியுங்கள்- ஊழல்வாதிகள் அப்படிதான் செய்கிறார்கள் – இது பல விதமாக மேற்கொள்ள படலாம் (தங்கம், டைமன் போன்றவை).

உபயோகமான தொடர்புகள்

Informative-large

Show content in:

Choose the languages you can read and you will only see content in those languages.